Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 09 நவம்பர் (ஹி.ச.)
பெரம்பலூர் அருகே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இரும்பு ராடால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் கிராமத்தில் ரவி என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக அருள்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தீபாவளி பண்டிகையன்று மது போதையில் இருந்த ரவி, அப்பகுதியில் உள்ள கோவிலில் படுத்திருந்தபோது, அருகில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கூறி சிறுவர்களை ரவி திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ், தீபாவளி பண்டிகையன்று சிறுவர்கள் பட்டாசு வெடிக்கத்தானே செய்வார்கள் எனக் கூறி ரவியிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்த அருள்ராஜ், ரவியைத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரவி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அருள்ராஜை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN