Enter your Email Address to subscribe to our newsletters

உத்திரபிரேதேசம், 09 நவம்பர் (ஹி.ச.)
சமாஜ்வாதி கட்சித் தலைவர் சனாதன் பாண்டே செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அதில், ராமர் கோயில் விவகாரத்தில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின்நடவடிக்கையைச் சரியானது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,
1991-ஆம் ஆண்டு முதல் கடந்த 35 ஆண்டுகளாக பாஜகவினர் முலாயம் சிங் யாதவை விமர்சித்து வருகின்றனர். ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அவர் உத்தரவிட்டதாகக் கூறி, இந்த விவகாரத்தைப் பொதுமக்களிடம் தவறான முறையில் எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், பாஜக ஆட்சியில் இருக்கும்போது அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு யார் உத்தரவிட்டது? அப்போது மாநிலத்தில் யாருடைய ஆட்சி நடைபெற்றது? மத்தியில் யாருடைய அரசு இருந்தது? என்ற கேள்விகளையும் எழுப்ப வேண்டும்.
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகத்தான் முலாயம் சிங் யாதவ் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார் என்றால், அது முற்றிலும் சரியான நடவடிக்கைதான்.
அந்தக் காலகட்டத்தில் இந்திய ராணுவமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு உட்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தை யாரும் நெருங்கிவிடக் கூடாது என்பதே முக்கியமான பொறுப்பாக இருந்தது. ஆனால், ராம பக்தர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அந்த இடத்தை எவ்வாறு சென்றடைந்தனர்..?
இதற்கு மத்திய அரசும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய உள்ளூர் நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த மசூதியோ அல்லது கோயிலோ இடிக்கப்பட்டிருக்கக்கூடும்.
அத்தகைய சம்பவம் இந்தியாவில் உள்நாட்டுப் போருக்கு இணையான மிகப்பெரிய மோதலை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
எனவே, இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டது
என்று சனாதன் பாண்டே தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V