இன்ஸ்டாகிராமில் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட உடனே மாற்ற வேண்டிய இரண்டு செட்டிங்ஸ்
சென்னை, 1 பிப்ரவரி (ஹி.ச.) இன்றைய உலகில் நாம் எதைப்பற்றி உரையாடுகிறோமோ, இணையத்தில் எதைத் துழாவுகிறோமோ, அது மின்னல் வேகத்தில் நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரமாக உருவெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இது ஏதோ மாயாஜாலம் என்று எண்ணினால்,
இன்ஸ்டாகிராமில் விளம்பர தொல்லையில் இருந்து விடுபட உடனே மாற்ற வேண்டிய இரண்டு செட்டிங்ஸ்


சென்னை, 1 பிப்ரவரி (ஹி.ச.)

இன்றைய உலகில் நாம் எதைப்பற்றி உரையாடுகிறோமோ, இணையத்தில் எதைத் துழாவுகிறோமோ, அது மின்னல் வேகத்தில் நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பரமாக உருவெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இது ஏதோ மாயாஜாலம் என்று எண்ணினால், அதுதான் இல்லை. உங்கள் இணையச் செயல்பாடுகளை இன்ஸ்டாகிராம் கமுக்கமாகக் கவனித்து வருவதன் விளைவே இது.

இந்த தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்கள் சில வேளைகளில் கைகொடுத்தாலும், பல சமயங்களில் நமது அந்தரங்கத்தில் யாரோ ஊடுருவி பார்ப்பது போன்ற ஒரு சங்கடமான உணர்வை ஏற்படுத்துகிறது. இனி கவலை வேண்டாம். மெட்டாவின் புதிய புதுப்பிப்பின்படி, இதைச் சுலபமாகக் கட்டுப்படுத்தலாம்.

1. விளம்பர விருப்பங்களை மாற்றுவது எப்படி?

- இன்ஸ்டாகிராம் செயலியைத் தொடங்கி, உங்கள் சுயவிவரப் பக்கத்தில் உள்ள மூன்று மெனு வரிகளைத் தட்டவும்.

- அதில் 'Account Centre' எனும் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

- இப்போது 'Ad preferences' பகுதிக்குச் செல்லவும்.

- அதில் 'Manage info' என்பதை அழுத்தி, 'Activity information from ad partner' பகுதிக்குச் செல்லவும்.

- அங்கு 'No, don't make my ads more relevant' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் மற்ற இணையதளங்களில் நீங்கள் தேடும் விவரங்களை இன்ஸ்டாகிராம் உபயோகிப்பது தடை செய்யப்படும்.

2. மெட்டா செயல்பாட்டை செயலிழக்கச் செய்வது எப்படி?

இதுவே மிக முக்கியமான அமைப்பு. இதன் மூலம் உங்களைப் பற்றிய தரவுகளை விளம்பர நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமுக்கு அனுப்புவதை நீங்கள் தடுக்கலாம்.

- மீண்டும் Account Centre பகுதிக்குச் செல்லுங்கள்.

- அங்கே 'Your Information and Permissions' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- இப்போது 'Your Activity off Meta Technologies' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- இங்கே 'Clear previous activity' கொடுத்து பழைய தரவுகளை அழித்து விடுங்கள், பிறகு 'Manage future activity' என்பதற்குச் சென்று அதைத் துண்டிக்கவும்.

இந்த அமைப்புகளை மாற்றிய பிறகு விளம்பரங்கள் முற்றிலுமாக நின்றுவிடாது. ஆனால், உங்களை வேவு பார்த்து வந்த விளம்பரங்கள் நின்றுவிடும். இனி வழக்கமான விளம்பரங்கள் மட்டுமே திரையில் வந்து தோன்றும்.

Hindusthan Samachar / JANAKI RAM