Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 1 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெருங்கூட்டத்தில் சிக்கித் துரதிர்ஷ்டவசமாக 41 உயிர்கள் பலியாயின. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கட்சி உட்படப் பலரும் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
முடிவில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, இந்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் அறிவித்தது.
சி.பி.ஐ-யின் தீவிர புலன்விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM