Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 பிப்ரவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில்
இருசக்கர வாகனம்
மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விளாம்பட்டியைச் சேர்ந்த 12 பயிலும் பள்ளி மாணவன் மாதேஷ், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தங்கம் என்ற இருவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதே கல்லூரி அருகில் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நடந்த விபத்தில் இராணுவ வீரர் உள்பட இருவர் என கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில்
6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் சாலையில் தடுப்புகளோ, வேக தடைகளோ ஏற்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J