வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 - விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வபெருந்தகை
சென்னை, 01 பிப்ரவரி (ஹி.ச.) வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது என காங்கிரசு கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத
Selva


Tw


சென்னை, 01 பிப்ரவரி (ஹி.ச.)

வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது என காங்கிரசு கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள் மற்றும் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவாகும்.

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது.

விலையேற்றங்களின் மூலம் தோல்விகளை மறைக்கும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காகவும், விலையேற்ற அரசியலுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி உறுதியான அரசியல் போராட்டத்தை என்றென்றும் தொடரும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ