Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 01 பிப்ரவரி (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி அருகே உள்ள ஒரு தனியார்(JSA) வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 6 பேர், பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை டோல்பிளாசா பகுதியில் அதிகாலை 3:30 மணியளவில் ஒரு காரில் டீ குடிப்பதற்காக வந்து விட்டு மீண்டும் கல்லூரி நோக்கி சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகே திருச்சி - சென்னை மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் இடையே இருந்த சென்டர் மீடியன் பகுதியை தாண்டி எதிர் திசைக்கு சென்றது.
எதிர் திசையில் சென்னை -திருச்சி மார்க்கத்தில் வேப்பூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த சுற்றுலா பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செங்கல்பட்டையைச் சேர்ந்த தரணி செல்வன்(20) சிதம்பரத்தைச் சேர்ந்த நிஷாந்த்(20) திருவண்ணாமலை சேர்ந்த விநாயகமூர்த்தி(20) ஆகிய 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த மது பிரியன்(20), திருவண்ணாமலை சேர்ந்த சசிகுமார்(20) திண்டிவனத்தைச் சேர்ந்த ராகேஷ்(20) ஆகிய முவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருச்சி மற்றும் பெரம்பலூர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் அறிந்து வந்த மாணவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.
Hindusthan Samachar / ANANDHAN