கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மனைவி - கள்ளக்காதலனின் மனைவி, குழந்தையை எரித்து கொன்ற பெண்
தெலங்கானா, 01 பிப்ரவரி (ஹி.ச.) தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் யாதவ் என்பவருக்கு, மர்ரிகூடா மண்டலம் சரம்பேட்டை சேர்ந்த மமதா வயது(28) என்ற பெண்ணுடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
கொலை


தெலங்கானா, 01 பிப்ரவரி (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம்,

நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் யாதவ் என்பவருக்கு, மர்ரிகூடா மண்டலம் சரம்பேட்டை சேர்ந்த மமதா வயது(28) என்ற பெண்ணுடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் அதில் ஒரு 6 மாத குழந்தை.

நாகேஷுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி குழந்தைகள் உள்ள சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்தது. இது திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.

இந்த உறவு நாகேஷின் மனைவி மமதாவுக்குத் தெரிய வந்ததால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. இதனால் உறவினர்கள் மற்றும் கிராம பெரியவர்கள் இருவரையும் எச்சரித்தனர்.

அதன்பிறகு நாகேஷ் மற்றும் சுஜாதா இடையேயான சந்திப்பு தடைபட்டது.

இதனால் நாகேஷை முழுமையாக தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்தில், மமதாவை தடையாகக் கருதி ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சுஜாதா பெரிய திட்டம் தீட்டினாள். காதலனை அடைய, நாகேஷின் மனைவியை கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.

இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை தனது வீட்டிலிருந்து ஒரு பையில் பெட்ரோல் பாட்டில், கத்தி, மிளகாய்த் தூள் எடுத்துக்கொண்டு சுஜாதா நாகேஷின் வீட்டிற்குச் சென்றாள். அப்போது வீட்டு முன்பு உட்கார்ந்து தனது ஆறு மாத குழந்தைக்கு மமதா பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். பின்னால் இருந்து திடீரெனச் சென்று மமதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாள் சுஜாதா. திடீரெனத் தீப்பிழம்புகள் எழுந்ததால் மமதா அலறியடித்து வெளியே ஓடினாள்.

மடியில் இருந்த மகனைத் தூரமாக வீசினாள். மமதாவின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ முழு உடலிலும் பரவியதால் மமதா உடல் எரிந்து அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தாள். குழந்தைக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஊர்

மக்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது குழந்தையும் உயிரிழந்தது.

விஷயம் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து க்ளூ டீமுடன் ஆதாரங்களைச் சேகரித்தனர். மமதா குடும்ப உறுப்பினர்களின் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொடூரத்தில் கணவர் நாகேஷுக்கு ஈடுபாடு இல்லாமல் சுஜாதா தனியாக செய்திருக்க மாட்டாள் என்று மமதா உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் சுஜாதாவுடன் நாகேஷையும் காவலில் எடுத்து

விசாரித்து வருகின்றனர். மறுபுறம், மமதா உயிரிழப்புக்கு காரணமான சுஜாதா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam