பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனுக்கு பீஹார் சட்டப்பேரவையில் உற்சாக வரவேற்பு
பாட்னா, 10 பிப்ரவரி (ஹி.ச.) பாஜக தேசிய தலைவராக கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நவீன், பாஜகவின் 12-ஆவது தேசியத் தலைவர் ஆவார். பங்கிபூர் எம்எல்ஏ இருக்கும் நிதின் தற்போது நடைபெற்று வரும் பீஹார் மாநில சட்டப்பேரவைக்கூட்ட தொ
Nitin Naveen receives rousing welcome


பாட்னா, 10 பிப்ரவரி (ஹி.ச.)

பாஜக தேசிய தலைவராக கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட நிதின் நவீன், பாஜகவின் 12-ஆவது தேசியத் தலைவர் ஆவார்.

பங்கிபூர் எம்எல்ஏ இருக்கும் நிதின் தற்போது நடைபெற்று வரும் பீஹார் மாநில சட்டப்பேரவைக்கூட்ட தொடரில் கலந்து கொள்ள இன்று வருகை தந்தார். அவையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவையில் தற்போது தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜக உறுப்பினர்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பி நிதினை வரவேற்றனர்.

பாஜகவின் மூத்த அவை தலைவரான பிரேம் குமார், உறுப்பினர்களில் ஒருவர் தேசிய அரசியலில் உச்சத்தை எட்டியுள்ளது அவைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்று கூறினார். அதன்பிறகு அவைத்தலைவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை நவீன் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து, துணை முதல்வரும் பாஜக உறுப்பினருமான சாம்ராட் சௌத்ரி, அமைச்சரும் ஜே.டி.(யு) எம்எல்ஏவுமான விஜய் குமார் சௌத்ரி, லோக் ஜனசக்தி கட்சியின்

(ராம் விலாஸ்) ராஜு திவாரி, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் மாதவ் ஆனந்த் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் ஜோதி தேவி ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b