Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 10 பிப்ரவரி (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் சீட்டு தகராறில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்பாடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பத்திரிசேகர் என்பவர், சீட்டு பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதே விவகாரத்தில், சென்னை L&O ADGP அலுவலகத்தில் கன் மேனாக பணியாற்றி வரும் காவலர் சிவகுமார் என்பவர், பத்திரிசேகரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காட்பாடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் நடந்த சூழ்நிலை, சீட்டு விவகாரம் தொடர்பான முன்விரோதம், சம்பவத்தின் போது யார் யார் இருந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சாட்சிகள் மற்றும் கிடைக்கும் ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN