Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.)
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய வரவான இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் சந்தையில் இறக்க உள்ளது.
இந்த அதிநவீன ஸ்மார்ட்போன் எதிர்வரும் மாதங்களில் அறிமுகமாகவுள்ளது. இச்சூழலில், புதிய இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தற்போது கசிந்துள்ளன. அதைப்பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.
இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோவின் தனித்துவமான அம்சங்கள்:
கிரிஸ்டல் கிளியரான 1.5கே எச்டிஆர் சினிமாடிக் டிஸ்ப்ளேவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது. இதன் டிஸ்ப்ளேவானது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த போனின் பின்புறம் கண்கவரும் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் களமிறங்க உள்ளது. இதனால், இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் செயலிகளை எந்தவிதத் தடையுமின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக, இந்த சிப்செட் மேம்படுத்தப்பட்ட செயல்திறனை வழங்கும்.
கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் 3D ஐஸ்கோர் VC கூலிங் சிஸ்டம் ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. JBL-ஆல் வடிவமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மிகச் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
துல்லியமான 50எம்பி ரியர் கேமராவுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. கூடுதலாக, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் வெளிவரும். அதோடு, மெமரியை அதிகப்படுத்த Micro SD கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. பாதுகாப்பான இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் போன் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் தவறாமல் கிடைக்கும். இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 6500எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவருவதால் நாள் முழுவதும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால், விரைவாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஐபி6 ரேட்டிங், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இதில் உள்ளன. சிறப்பான அம்சங்கள் நிறைந்த இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மாடல் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM