மதுரை விமான நிலையத்தில் 9.5 கோடி மதிப்பில ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்!
மதுரை, 10 பிப்ரவரி (ஹி.ச.) மதுரை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்க
K


மதுரை, 10 பிப்ரவரி (ஹி.ச.)

மதுரை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு சுங்க இலாகா நுண்ணறிவு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அந்த பயணியின் பையில், சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

எனவே அதனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் ஒன்பதரை கோடி மதிப்பில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது இதுவே முதல் முறை

Hindusthan Samachar / Durai.J