Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய தேசத்தில் ஒட்டுமொத்தமாக 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா அவர்கள் இந்த செய்தியை தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் போதுமான மின்சார வாகன சார்ஜிங் வசதிகளை உபயோகப்படுத்தும் விதமாக, ஃபேம்-2 மற்றும் பிஎம் இ-டிரைவ் போன்ற திட்டங்களின் வாயிலாக அரசாங்கம் ரூ.912 கோடிக்கும் அதிகமான தொகையையும், மற்றும் ரூ.2000 கோடி ரூபாய்களையும் ஒதுக்கியுள்ளதாக அவர் பெருமையுடன் கூறினார்.
பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த வருடம் அமைச்சகம் வெளியிட்டது.
இந்த வழிகாட்டுதல் சார்ஜிங் நிலையங்களை செயல்படுத்துவதற்கான ஒரு சிறப்பான வடிவமைப்பை வழங்குகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM