70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செ
70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் விழா - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு


சென்னை, 10 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கோவில்கள் சார்பில் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோவில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை, வேப்பேரி, பி.கே.என். ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து, தொடங்கி வைத்தார். இன்றைய தினம் இதேபோல் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b