மகாராஷ்டிராவின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு
மும்பை, 10 பிப்ரவரி (ஹி.ச.) மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி
Sunetra Pawar sworn in as Maharashtra's first woman deputy chief minister


மும்பை, 10 பிப்ரவரி (ஹி.ச.)

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர முதல் பெண் துணை முதல்வராக மந்திராலயாவில் சுனேத்ரா பவார் இன்று (பிப்ரவரி 10) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடன் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் பிரபுல் படேல், மாநில பிரிவுத் தலைவர் சுனில் தட்கரே, சாகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிஃப், நர்ஹரி ஷிர்வால் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சுனேத்ரா பவார் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்,

இன்று, மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கும்போது, நம்பிக்கை, கடமை மற்றும் தியாக உணர்வு ஆகியவற்றால் நான் நிரம்பியுள்ளேன். வளர்ச்சிக்காக மகாராஷ்டிர மக்கள் மீது கௌரவ அஜித்தாதா காட்டிய வாழ்நாள் அர்ப்பணிப்பு, எனக்கு வழிகாட்டும் வெளிச்சமாக உள்ளது.

தாதாவின் பணி நெறிமுறைகள், அவரது தீர்க்கமான தன்மை மற்றும் மக்களுடன் அவர் பகிர்ந்து கொண்ட ஆழமான பிணைப்பு ஆகியவற்றிலிருந்து வலிமையைப் பெற்று, இந்தப் பாதையில் நான் முன்னேறுவேன்.

அவரது நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றுவதும், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண குடிமக்களின் அபிலாஷைகளுக்கு நீதி வழங்குவதும் எனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b