Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 10 பிப்ரவரி (ஹி.ச.)
20 அணிகள் பங்குபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில், நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில், அந்த அணியின் தலைவர் மார்க்ரம் 59 ரன்களையும், டிகாக் 25 ரன்களையும், ரயான் ரிகல்டன் 33 ரன்களையும், டேவிட் மில்லர் 39 ரன்களையும், ஸ்டப்ஸ் 34 ரன்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
கனடா அணியின் சார்பில் அனுஷ் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை அடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கனடா அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக அந்த அணியின் ரன் வேகம் குறைக்கப்பட்டது. 20 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த கனடா அணி 8 விக்கெட்டுகள் இழப்பின் காரணமாக 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலமாக 57 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / JANAKI RAM