Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 10 பிப்ரவரி (ஹி.ச.)
தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள ரீகன் குமார் என்பவர் பேச்சியம்மாள் மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண்களுடன் இணைந்து, தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் முதலியார்பட்டி பகுதியை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர் உட்பட பல நபர்களிடம் அந்த இடம் விற்பனைக்கு உள்ளதாக கூறி கோடி கணக்கில் ரீகன்குமார் அட்வான்ஸ் வாங்கிய நிலையில், பல நாட்களாக இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ரீகன் குமார் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் சென்று கேட்டபோது,
அவர்களை அவர் மிரட்டியதாக கூறப்படும் நிலையில், நிலம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை நடத்திய போது அந்த நிலம் அரசு நிலம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவனிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசிக தென்காசி மாவட்ட துணை செயலாளரான ரீகன் குமாரை என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரீகன் குமார் மீது தென்காசி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குறிப்பாக தாராபுரம் பகுதியில் ஜெயலலிதா என்ற பெண்ணிடம், தான் income tax ஆபிஸர் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
Hindusthan Samachar / ANANDHAN