Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் மோடியை தாக்க சிலர் திட்டம் தீட்டியதாக சபாநாயகர் ஓம் பிர்லா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதனால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்தாமல் மசோதா நிறைவேறியது.
இந்த சூழலில் இன்று எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கை அருகே சூழ்ந்து நின்ற வீடியோ காட்சியை தனது எக்ஸ் தளத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டார். இதில் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கை அருகே சூழ்ந்து நின்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது.
மேலும், கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள இன்று எக்ஸ் தள பதிவில் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. அவர்கள் அவையில் அனைத்து பாஜ எம்.பி.க்களையும் தடுத்து நிறுத்தினர்.
சூழ்ந்துகொண்டு ஆவேசப்பட்டனர். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையையும் புனிதத்தையும் காப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b