மக்கள்தொகைதான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து - ராகுல் காந்தி
புதுடெல்லி, 11 பிப்ரவரி (ஹி.ச.) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 11) உரையாற்றினார். மக்களவையில் அவர் பேசியதாவது, அவையில் பேசுவதற்க
மக்கள்தொகைதான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து - ராகுல் காந்தி


புதுடெல்லி, 11 பிப்ரவரி (ஹி.ச.)

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 11) உரையாற்றினார்.

மக்களவையில் அவர் பேசியதாவது,

அவையில் பேசுவதற்கு எனக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். எரிசக்தியையும், பொருளாதாரத்தையும் ஆயுதமாக பயன்படுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலகின் எல்லா பகுதிகளிலும் போர் மூளும் அபாயம் நிலவி கொண்டு தான் இருக்கிறது. எரிபொருள், பொருளாதாரத்தை ஆயுதமாக்கும் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

டாலரும், அமெரிக்க மேலாதிக்கமும் சவாலுக்கு உள்ளாகி இருக்கின்றன. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள்தான்.

மக்கள்தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், மக்கள்தொகைதான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம்.

நாங்கள் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், முதலில் கூறுவது, சமமாக பேச வேண்டும், உங்களின் ஊழியர்களை போல் நடத்தக் கூடாது. இரண்டாவது எங்களின் எரிசக்தி பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.

அடுத்து, உங்கள் விவசாயிகளை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நாங்கள் எங்களின் விவசாயிகளை பாதுகாப்போம்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b