2-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் - 100 க்கும் மேற்பட்டோர் கைது
மதுரை, 11 பிப்ரவரி (ஹி.ச.) மாற்றுத்திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, டெல்லி, தெலுங்கானா, திரிபுராவில் வழங்கப்படும் உதவி தொகையை போன்று தமிழகத்தில் உதவி தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சா
உ


மதுரை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

மாற்றுத்திறனாளிகளுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, டெல்லி, தெலுங்கானா, திரிபுராவில் வழங்கப்படும் உதவி தொகையை போன்று தமிழகத்தில் உதவி தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் தொடர் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்றும் இரண்டாவது நாளாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மதுரை மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அண்டை மாநிலங்களில் வழங்குவதை போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து கோட்டாச்சியர் அலுவலகம் முன்பே உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் இந்த மறியல் போராட்டத்தினால் உசிலம்பட்டி பேரையூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,

Hindusthan Samachar / Durai.J