Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார்.
அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முகத்தை ஆசாமி அவர் கத்தியால் நாயை குத்த முயன்றார்.
அப்பொழுது அதைப் பார்த்த அப்பகுதியில் குடியிருக்கும் ஜெயந்தி என்பவர் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓட்டம் பிடித்தார்.
அந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினரிடம் புகார் அளித்து உள்ளனர்.
அந்த ஆசாமியை காவல்துறையினர் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மீண்டும் அந்த நபர் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
Hindusthan Samachar / Durai.J