மும்பை மாநகரட்சியின் மேயராக பாஜகவைச் சேர்ந்த ரிது தாவ்டே தேர்வு
மும்பை, 11 பிப்ரவரி (ஹி.ச.) மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காடியும் இன்று போட்டியின
மும்பை மாநகரட்சியின் மேயராக பாஜகவைச் சேர்ந்த ரிது தாவ்டே தேர்வு


மும்பை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில், மேயராக ரிது தாவ்டேவும், துணை மேயராக சஞ்சய் காடியும் இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த 6-ம் தேதி ரிது தாவ்டே மும்பை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மேயர் மற்றும் துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டே மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அமித் சதம் அறிவித்தார். இவர் பிஎம்சியின் கல்விக் குழுத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.

இதுபோல சிவசேனா கட்சியின் (ஷிண்டே) 5-வது வார்டு உறுப்பினர் சஞ்சய் சங்கர் காதி, துணை மேயர் வேட்பாளராக கடந்த 6ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை மேயர் பதவியை சுழற்சி முறையில் 4 பேருக்கு வழங்க சிவசேனா முடிவு செய்திருப்பதால், இவர் 15 மாதங்களுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

Hindusthan Samachar / vidya.b