டி20 உலகக் கோப்பை - யுஏஇ அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.) டி20 உலகக் கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் போட்டியிட்
டி20 உலகக் கோப்பை - யுஏஇ அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நியூசிலாந்து


சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

டி20 உலகக் கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் போட்டியிட்டன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முகமது வசீம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி யுஏஇ அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பத்தில் ஆர்யன்ஸ் ஷர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு முகமது வசீம், அலிஷான் சராபு இருவரும் திறமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய இந்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். முகமது வசீம் 66 ரன்களும், அலிஷான் சராபு 55 ரன்களும் எடுத்தனர்.

முடிவில் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 174 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் சீபராட், பின் ஆலன் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே யுஏஇ அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இறுதியில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் சீபராட் 42 பந்துகளில் 89 ரன்களும், பின் ஆலன் 50 பந்துகளில் 84 ரன்களும் எடுத்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM