Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
இன்று அறிவியலில் பெண்களின் பங்களிப்பைப் போற்றும் அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் கொண்டாடப்படும் நாள்.
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம்:
இந்த நாள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
நோக்கம் - அறிவியல் துறையில் பாலின சமத்துவத்தை உறுதி செய்வது மற்றும் இளம் சிறுமிகளை ஆராய்ச்சித் துறைகளில் ஈடுபட ஊக்குவிப்பது.
முக்கியத்துவம் - மேரி கியூரி முதல் இந்தியாவின் 'மிசைல் வுமன்' டெஸ்ஸி தாமஸ் வரை பல பெண்கள் தடைகளைத் தகர்த்து சாதனை படைத்துள்ளனர். அவர்களின் வழியில் இக்கால சிறுமிகளும் பயணிக்க வேண்டும் என்பதே இந்நாளின் செய்தி.
சிந்தனை - அறிவியலுக்குப் பாலினம் கிடையாது; ஆனால் உலகிற்கு அறிவியலில் பெண்களின் பார்வை அவசியம்.
அறிவியலில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு, சமூகம் அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை இன்று அளிக்க வேண்டும்.
Hindusthan Samachar / JANAKI RAM