Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 பிப்ரவரி (ஹி.ச.)
கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை வழி மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம் விதித்து உள்ளனர்.
அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திக்கொள்கிறேன் என்று அந்த ஓட்டுநர் கண்ணியமாகச் சொல்ல, ஆத்திரம் அடைந்த ஒரு காவலர், வாய மூடிட்டு போடா... கோபம் வந்துரும், நான் சொல்றத நீ கேக்குறியா ? நீ சொல்றத நான் கேட்கவா ? என்று ஒருமையில் மிரட்டி 99 உள்ளார்.
இதனை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து அங்கு இருந்த நபர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.
அந்த வீடியோவில், அபராதத்தை நீதிமன்றத்திலோ அல்லது ஆன்லைனிலோ கட்ட சட்டத்தில் இடமிருக்கிறது.
ஆனால் இந்த காவலர், நாங்கள் வைத்து இருக்கும் மெஷினில் தான் கட்ட வேண்டும் என்று அடாவடி செய்கிறார் என அந்தப் நபர் வேதனையுடன் பதிவிட்டு உள்ளார்.
குடும்பத்துடன் வந்தவரிடம் கண்ணியம் பார்க்காமல், ஒருமையில் மிரட்டி சீன் காட்டிய அந்த காவலரின் செயல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், வரம்பு மீறி நடந்து கொண்ட அந்தப் போக்குவரத்து காவலர் மீது உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b