தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் - அண்ணாமலை
சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச) தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்
BJP Annamalai


சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச)

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில், கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு கே.என்.நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் இந்த ரமேஷ்.

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர்.

இன்னும் எத்தனை மாநிலங்களில், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர், திராவிட மாடலை நிலைநாட்டியிருக்கிறார்கள் என்பது, கேரள மாநில காவல்துறையினர் விசாரணையில் தெரிய வரும் என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

Hindusthan Samachar / P YUVARAJ