Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 பிப்ரவரி (ஹி.ச.)
கோவையில் இருந்து வியாழக்கிழமைகளில் ஜெய்ப்பூர் நோக்கி காலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06181), பிப்ரவரி 26, மார்ச் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில் புறப்பட்ட நாளில் இருந்து 3-வது நாள் மதியம் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும்.
இதேபோல், மறுமார்க்கத்தில் ஜெய்ப்பூரில் இருந்து கோவைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06182) மார்ச் 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில் புறப்பட்ட நாளில் இருந்து 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவையை சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b