தி.மு.க.கூட்டணி கலகலத்து விட்டது - பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு..!
கோவை, 12 பிப்ரவரி (ஹி.ச.) கோவை, வடவள்ளி கல்வீரம்ப்ளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினார்.‌ முகாமில் மத்திய அரசின் நலத் திட்ட
Nainar Nagenthran Byte


கோவை, 12 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை, வடவள்ளி கல்வீரம்ப்ளையம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மோடி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினார்.‌

முகாமில் மத்திய அரசின் நலத் திட்ட வாரியம் 70 வயது அதற்கு மேற்பட்டோருக்கு ஆண்டிற்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு,செல்வ மகள் சேமிப்பு திட்டம் , கண் மருத்துவ முகாம் உள்ளிட்டவை இடம் பெற்றதை மாநில தலைவர் பார்வையிட்டார்.

200 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,

காலச் சக்கரம் என்பது சுழன்று வரும் பொது கிரகங்கள் செய்யும், திசையின் கிரகங்கள் எல்லாம் மோடியின் பக்கம் திரும்பி உள்ளது. அமித்ஷா தேசிய கூட்டணியை உறுதி படுத்தினர்.

தி.மு.க வின் கூட்டணி கலகலத்து போய் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்கிறார்கள்.

எங்கள் கட்சிக்கு எதுவும் தேவையில்லை... எங்களுக்கு தமிழகத்தில் இருந்து தி.மு.க வை விரட்டினால் மட்டும் போதும். இன்று வானதி ஶ்ரீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் மோடி அரசின் பல்வோறு நலத் திட்டஙக்ளை வழங்கி உள்ளார்.

மத்திய அரசின் மாநில மாவட்டம் முழுவதும், பெண்கள் தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டது வருகிறது.

பிறருக்காக உழைக்கும் இயக்கம் இரு இயக்கம் பொண்களுக்காக உழைக்கும் தலைவர் மோடியும், எம்.ஜி.ஆர்‌ அவர்களும் . தமிழுக்கான தமிழ் மக்களுக்காக உழைப்பவர் மோடி அவர்கள் மலேசியாவகற்கு சென்ற நிலையிலும் தமிழை பற்றி தமிழ் மக்களை பற்றி பெருமையை பேசி உள்ளார் என பேசினார்.

Hindusthan Samachar / P YUVARAJ