வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் வைரல் - போலீசார் விசாரணை
கோவை, 12 பிப்ரவரி (ஹி.ச.) கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்க
ச


கோவை, 12 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில்

காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர்.

வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி ஒருவரை மற்ற வடமாநில இளைஞர்கள் தாக்கினர்.மாறி மாறி பெல்ட்டை கழற்றி தாக்கி கொண்ட நிலையில்,அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் அவர்களை சமரசபடுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் சண்டையிட்டு

கொண்ட வட மாநில இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J