இந்து பக்தர்களை, கிறிஸ்தவர்கள் என்று கூறி திருப்பி அனுப்பிய ராமேஸ்வரம் கோவில் நிர்வாகம்
ராமநாதபுரம், 12 பிப்ரவரி (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இன்று வெளி நாட்டைச் சேர்ந்த 17 இந்து பக்தர்கள் தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்துள்ளனர். அப்போது கோவிலின் ருத்ரா அபிஷேக பூஜை செய்வதற்காக கோயிலில் நிர்ணயிக்க
Rameswaram Temple


ராமநாதபுரம், 12 பிப்ரவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இன்று வெளி நாட்டைச் சேர்ந்த 17 இந்து பக்தர்கள் தரிசனம் செய்ய ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

அப்போது கோவிலின் ருத்ரா அபிஷேக பூஜை செய்வதற்காக கோயிலில் நிர்ணயிக்கப்பட்ட நபர் ஒன்றுக்கு ரூ.3000 என ஐந்து நபர்களுக்கு ரூ.15,000 செலுத்தி ருத்ரா அபிஷேக தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொண்டுள்ளனர்.

டிக்கெட்டை வெளிநாட்டு இந்து பக்தர்கள் சென்று ருத்ராபிஷேக பூஜை செய்ய கூறும்போது கோவில் தற்காலிகமாக குருக்கள் பூஜை செய்ய முடியாது என கூறியுள்ளார்.

அருகில் இருந்த கோவில் பணியாளர்களிடம் வெளிநாட்டு பக்தர்கள் சென்று முறையிட்டதற்கு வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கிறிஸ்தவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை கூறியுள்ளார்.

இந்து மதத்தை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்களை கிறிஸ்தவர்கள் என்று கூறி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் மனமுடைந்து மன உளைச்சலுடன் சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN