Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 12 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி கோவிலுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று வாகனங்களை நன்கொடையாக வழங்கியது.
ஏழுமலையான் கோவில் முன் அந்த வாகனங்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்யா சௌத்ரி நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள், சாவி ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை சற்று தூரம் இயக்கி பார்த்த கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்யா சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது,
சென்னை சேர்ந்த நிறுவனம் ஒன்று சுமார் 7,00,000 ரூபாய் மதிப்புள்ள மூன்று மின்சார வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற சில வாகனங்கள் இங்கு உள்ளன.
நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்களை பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்த இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam