Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 13 பிப்ரவரி (ஹி.ச.)
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனத்திற்காக
குடும்பத்துடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார்.
இரவு திருப்பதி மலையில் தங்கிய அவர் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று
விஐபி பிரேக் தரிசனம் மூலம் குடும்பத்துடன் சாமி கும்பிட்டார்.
பின்னர் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் அகிலாண்டம் பகுதிக்கு சென்ற அவர் அங்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam