Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 13 பிப்ரவரி (ஹி.ச.)
பெங்களூரு கிராமப்புற மாவட்டம் ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள எம் சத்யவரா கிராமம் அருகே இன்று காலை நடந்த ஒரு பயங்கர சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் .
ஹோஸ்கோட்-டபாஸ்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கேன்டர் வாகனம், ஒரு பைக் மற்றும் ஒரு எக்ஸ்யூவி கார் இடையே தொடர் விபத்து ஏற்பட்டன. இதில் காரில் இருந்த ஆறு பேரும், பைக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்கு அதிக வேகமே காரணம் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்படுகிறது.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு XUV கார், முதலில் முன்னால் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை மோதி, பின்னர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கேன்டரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்களில் 6 பேர் பெங்களூருவின் கொத்தனூரைச் சேர்ந்தவர்கள்.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
பெங்களூரு கிராமப்புற எஸ்பி சந்திரகாந்த் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
உடல்கள் ஹோஸ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam