ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டு யானைகளின் வெறிச்செயல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 உயிர்கள் பலி
ராஞ்சி, 13 பிப்ரவரி (ஹி.ச.) ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் பகுதியில், காட்டு யானைகளின் கூட்டம் கோரத்தாண்டவம் ஆடியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்றிரவு சர்சூவைச் சேர்ந்த கொண்ட்வார் கிராம
ஜார்கண்ட் மாநிலத்தில் காட்டு யானைகளின் வெறிச்செயல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 உயிர்கள் பலி


ராஞ்சி, 13 பிப்ரவரி (ஹி.ச.)

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் பகுதியில், காட்டு யானைகளின் கூட்டம் கோரத்தாண்டவம் ஆடியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்றிரவு சர்சூவைச் சேர்ந்த கொண்ட்வார் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், இன்று விடியற்காலையில் இந்த துயரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளன.

இதில் ஆறு உயிர்கள் காவு வாங்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்த யானைக் கூட்டம் போகாரோ, ராம்கர் மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் சுற்றித் திரிந்து அட்டூழியம் செய்து வருகிறது.

இதற்கு முன்பும் இதே போன்று பலர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கு நிரந்தரமான தீர்வு காணவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM