ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ள கூகிள் நிறுவனம்
சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.) ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு கூகிள் நிறுவனம் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. அதில்,ஆண்ட்ராய்டு 12 அல்லது அதைவிடப் பழைய வெர்ஷன்களில் இயங்கும் மொபைல் போன்களுக்கு இனிமேல் பாதுகாப்பு அப்டேட்கள் தரப்படமாட்டாது என்
ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ள கூகிள் நிறுவனம்


சென்னை, 13 பிப்ரவரி (ஹி.ச.)

ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு கூகிள் நிறுவனம் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

அதில்,ஆண்ட்ராய்டு 12 அல்லது அதைவிடப் பழைய வெர்ஷன்களில் இயங்கும் மொபைல் போன்களுக்கு இனிமேல் பாதுகாப்பு அப்டேட்கள் தரப்படமாட்டாது என்று கூகிள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பாதுகாப்பு செட்டிங்ஸ்களை மெருகேற்ற அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், கூகிள் இப்படியொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகவல் கசிவு மற்றும் இணையவழி தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, யூசர்கள் உடனே சாஃப்ட்வேரை அப்டேட் செய்யும்படி கூகிள் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM