மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் - அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி, 13 பிப்ரவரி (ஹி.ச.) மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,0
Minister Geethajeevan


தூத்துக்குடி, 13 பிப்ரவரி (ஹி.ச.)

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

முதல்வரின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம்.

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b