Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 பிப்ரவரி (ஹி.ச.)
2014 ல் பிரதமராக மோடி பொறுப்பு ஏற்ற பிறகு, மத்திய அமைச்சரவை செயலகமானது கர்தவயா பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ராஜபாதை சீரமைக்கப்பட்டு கர்தவயா பாதை என பெயர் சூட்டப்பட்டது. ரேஸ் கோர்ஸ் சாலைக்கு லோக் கல்யாண் மார்க் எனவும், கவர்னர் மாளிகைகள் லோக் பவன்கள் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1900ம் ஆண்டில் அவர்களது தலைமைச் செயலகம் டில்லி சவுத் பிளாக்கில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை பிரிட்டன் கட்டட கலைஞர் ஹெர்பெர்டி பாகர் வடிவமைத்தார்.
இந்த கட்டடத்தில் பிரதமர் அலுவலகம், ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் செயல்பட்டன.
இந்த அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் என்ற புதிய இடத்துக்கு இடம் மாறின. இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக புதிய கட்டடம் மற்றும் மத்திய செயலக கட்டடமான கர்தவயா பவன் 1 மற்றும் 2 ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று
(பிப்ரவரி 13) திறந்து வைத்தார்.
கடந்த 1921 முதல் சவுத் மற்றும் நார்த் பிளாக்குகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலி செய்யப்படுகின்றன.
பிரதமர் அலுவலகம் இருந்த சவுத் பிளாக் கட்டடம் தேசிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.
இந்த திறப்பு விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்லை இந்த திறப்பு விழா குறிக்கிறது.
நவீன, திறமையான, அணுகக்கூடிய, குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகச் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b