20 ஓவர் உலகக் கோப்பை - 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி!
புதுடெல்லி, 13 பிப்ரவரி (ஹி.ச.) 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவிலும், இலங்கையிலும் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆப்பிரிக்க அணியான நமீபியாவை நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தி
20 ஓவர் உலகக் கோப்பை - 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி!


புதுடெல்லி, 13 பிப்ரவரி (ஹி.ச.)

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவிலும், இலங்கையிலும் களைகட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஆப்பிரிக்க அணியான நமீபியாவை நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதலே இந்திய அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களைப் பெருக்கினர். குறிப்பாக, இஷான் கிஷன் பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்டு, நமீபியா அணியின் பந்துவீச்சை நொறுக்கினார். வெறும் 20 பந்துகளில் மின்னல் வேக அரைசதம் அடித்து அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கண்களுக்கு விருந்தளித்தார். அவர் 28 பந்துகளில் 52 ரன்களை விளாசினார்.

முடிவில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைக் குவித்தது. நமீபியா அணியில் அதிகபட்சமாக எராஸ்மாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் நமீபியா அணி களத்தில் இறங்கியது.

இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், நமீபியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நமீபியா அணி, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது.

Hindusthan Samachar / JANAKI RAM