Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சார பேருந்துகளைப் பயன்படுத்த முடிவு செய்த அதன்படி, 625 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதில் முதற்கட்டமாக 380 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன.
கடந்த 2025 ஜூன் மாதம் சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை, தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள 245 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
மீதமுள்ள 245 மின்சார பேருந்துகள் தயாரிப்பதற்கான பணிகள் முடிந்த பிறகு, விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இதில் 145 பேருந்துகள் பல்லவன் இல்லம் பணிமனை, 100 பேருந்துகள் தண்டையார் பேட்டை பணிமனையுடன் இணைக்கப்படும்.
2-ஆவது கட்டமாக மேலும் 600 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b