Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 14 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையத்தை அடுத்த ராஜீவ் காந்திநகர் அருகே உள்ள சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் தமிழக அரசின்
விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓடுதளம்,
நீச்சல் குளம், இறகு பந்து விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய நவீன விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் திராவிட முன்னேற்ற கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான
பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பயணித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தடைந்துள்ளார்.
அதன் பின்னர் நேரடியாக ராஜுவ் காந்தி நகருக்கு சென்று விளையாட்டு மைதானம் கட்டுமான
பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைச்சர் எவ.வேலு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி
மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து உடனிருந்தனர்.
பணிகள் துரிதமாக நடைபெற்று விரைவில் விளையாட்டு அரங்கத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முதலமைச்சர் அறிவுறுத்தினா.
Hindusthan Samachar / GOKILA arumugam