Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 14 பிப்ரவரி (ஹி.ச)
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி்யிலும் சட்டமன்ற தொகுதி நடைபெற உள்ள சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்பொது இந்த பணிகள்நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதனை புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று (பிப்ரவரி 14) வெளியிட்டார்.
வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்தம் 7,88,696 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 3,70,955 ஆண்கள், 4,17,620 பெண்கள் மற்றும் 121 மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்பு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் கிடைத்த மனுக்கள், திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பின் இறுதி பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தொகுதி அடிப்படையில் கணக்கிட்டால், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மறுபுறம், ராஜ்பவன் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர்.
இது மாநிலத்தின் பகுதிகளுக்கு இடையிலான மக்கள் தொகை மற்றும் வாக்காளர் பரவலை வெளிப்படுத்துகிறது.இந்த இறுதி வாக்காளர் பட்டியல், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களுக்கான முக்கிய அடிப்படை ஆவணமாக இருக்கும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரைகளை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது பிற விவரங்களில் திருத்தம் தேவைப்பட்டால், உடனடியாக தொடர்புடைய தேர்தல் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b