வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருட்டு
ஆந்திரா, 14 பிப்ரவரி (ஹி.ச.) ஆந்திர மாநிலம் நந்தியாலா நகர மெயின் பஜார் வீதியில் உள்ள நகை கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்த இரண்டு பெண்கள் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி கால் கொலுசை திருடி சென்றனர். நகை வாங்குவது போல் அந்த கடைக்கு வந்த இ
திருட்டு


ஆந்திரா, 14 பிப்ரவரி (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் நந்தியாலா நகர மெயின் பஜார் வீதியில் உள்ள நகை கடைக்கு

வாடிக்கையாளர் போல் வந்த இரண்டு பெண்கள் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி

கால் கொலுசை திருடி சென்றனர்.

நகை வாங்குவது போல் அந்த கடைக்கு வந்த இரண்டு பெண்கள் நீண்ட நேரம் பேரம் பேசி

உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பினர்.

அப்போது சுமார் 175 கிராம் எடையுள்ள கால் கொலுசை அந்த பெண்கள் திருடி மறைத்து எடுத்துச் சென்று விட்டனர்.

மறுநாள் கடையில் இருப்பு இருக்கும் பொருட்களை ஆய்வு செய்தபோது கால் கொலுசு காணாமல் போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தார்.

அப்போது வாடிக்கையாளர் போல் வந்த இரண்டு பெண்கள் கால் கொலுசுக்களை திருடி

சென்றது தெரியவந்தது.

சிசிடிவி பதிவு காட்சிகள் அடிப்படையில் அந்த கடையின் உரிமையாளர் அளித்த புகார்

அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள நந்தியாளா போலீசார் இரண்டு பெண்களையும்

தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam