டிஜிட்டல் மோசடியை தடுக்க பார்தி ஏர்டெல் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் எச்சரிக்கை முறை
சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச.) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியை தடுப்பதற்காக, பார்தி ஏர்டெல் நிறுவனம் AI அடிப்படையிலான மோசடி எச்சரிக்கை முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த வசதி ஹரியானாவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம
டிஜிட்டல் மோசடியை தடுக்க பார்தி ஏர்டெல் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் எச்சரிக்கை முறை


சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச.)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடியை தடுப்பதற்காக, பார்தி ஏர்டெல் நிறுவனம் AI அடிப்படையிலான மோசடி எச்சரிக்கை முறையை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்த வசதி ஹரியானாவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏர்டெல் உபயோகிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரத்தில் என்னென்ன மாறப்போகிறது?

ஏர்டெல் நிறுவனத்தின் AI அடிப்படையிலான புதிய மோசடி எச்சரிக்கை முறை சந்தேகத்திற்கு இடமான தொலைபேசி அழைப்பின்போது, வங்கி சம்பந்தப்பட்ட ஓடிபி-ஐ பகிர்ந்து ஏமாற இருக்கும் வாடிக்கையாளர்களை காப்பாற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த வசதி நெட்வொர்க் லெவலில் செயல்படுகிறது. அதாவது, ஏர்டெல் நிறுவனத்தால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மோசடி முறைகளுடன் ஒத்துப்போகும் உள்வரும் அழைப்பில் ஒரு வாடிக்கையாளர் பேசிக்கொண்டிருந்தால், அவர் மோசடி அழைப்பில் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது.

அந்த சமயத்தில் வங்கி சம்பந்தப்பட்ட ஓடிபி ஒன்று வாடிக்கையாளருக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை கண்டுபிடிக்கும்படி, இந்த மோசடி எச்சரிக்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சரியான நேரத்தில், ஏர்டெல் ஒரு உடனடி எச்சரிக்கையை கொடுக்கும். அதன் மூலமாக அந்த ஓடிபி-ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்று பயனரை எச்சரிக்கும்.

ஏர்டெல்லின் இந்த செயல்பாடு ஒரு மோசடி நடந்த பிறகு வரும் ஆப் அடிப்படையிலான மோசடி எச்சரிக்கைகள் அல்லது வங்கி அறிவுரைகளை போல இல்லாமல், ஒரு நேரடி அழைப்பின் போது ஒரு பயனர் ஓடிபி-ஐ பகிர நிர்பந்திக்கப்படும்போது, மோசடி பொதுவாக வெற்றி பெறும் சரியான இடத்தில் ஏர்டெல்லின் இந்த பாதுகாப்பு அமைப்பு தலையிட முயற்சிக்கிறது.

அழைப்பின் தன்மை, வங்கிகளில் இருந்து ஓடிபி டெலிவரி செய்யப்படும் நேரம் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட மோசடி முறைகளுடன் தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட பல விஷயங்களை இந்த அமைப்பு நிகழ் நேரத்தில் ஆராய்கிறது. இந்த விஷயங்கள் சரியாக இருக்கும்போது, ஓடிபி தவறாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பயனருக்கு எச்சரிக்கை கிடைக்கும்.

முக்கியமாக, இந்த வசதிக்கு எந்த ஒரு App-ம் நீங்கள் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. மேலும் உங்களிடம் எந்த ஸ்மார்ட்போன் இருந்தாலும், அதற்கான பொருத்தம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும் வாடிக்கையாளர் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இந்த பாதுகாப்பு முழுக்க முழுக்க ஏர்டெல்லின் நெட்வொர்க் அறிவு மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது.

இது போன்ற மோசடி சூழ்நிலைகளை கண்டுபிடிப்பதில் அதிக துல்லியத்துடன் இந்த அமைப்பு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் அதிகமாகி வரும் மோசடி போக்கை குறைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது.

இதன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் டெலிவரி ஆட்கள், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் அல்லது வங்கி பிரதிநிதிகளைப் போல நடித்து, பண பரிவர்த்தனைகளுக்கான ஓடிபி-களைப் பகிர வைக்கும் சூழ்நிலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM