டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலியாவை திணறடித்த ஜிம்பாப்வேயின் அதிரடி ஆட்டம்!
கொழும்பு, 14 பிப்ரவரி (ஹி.ச.) பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியா மற்றும் இலங்கையில் களைகட்டி வருகிறது. இதில் பலம் வாய்ந்த 20 அணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிர
டி20 உலகக் கோப்பை - அவுஸ்திரேலியாவை திணறடித்த ஜிம்பாப்வேயின் அதிரடி ஆட்டம்!


கொழும்பு, 14 பிப்ரவரி (ஹி.ச.)

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியா மற்றும் இலங்கையில் களைகட்டி வருகிறது.

இதில் பலம் வாய்ந்த 20 அணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

நேற்றைய லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகித்த அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மோதின. கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அணிக்கு ஒரு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். மருமணி 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பென்னெட் ஒரு அபார அரைசதம் விளாசினார். அடுத்து வந்த ரியான் புரி, தனது பங்கிற்கு 35 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்டொய்னிஸ் மற்றும் கிரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனை அடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் இங்க்லிஷ், கேப்டன் ஹெட் ஆகியோர் களம் புகுந்தனர். ஆரம்பத்திலேயே அவுஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இங்க்லிஷ் (8), ஹெட் (17), கிரீன் (0), டிம் டேவிட் (0), ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து மேக்ஸ்வெல் மற்றும் ரென்ஷா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். பொறுப்புடன் விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கையாக இருந்த ரென்ஷா ஒரு அருமையான அரைசதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணியில் பிளெஸ்ஸிங் முசரபானி 4 விக்கெட்டுகளையும், பபிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதன் விளைவாக 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றி பெற்றது.

Hindusthan Samachar / JANAKI RAM