Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 14 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொசவம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணிற்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது.
இன்று அதிகாலை தாயுடன் இருந்த ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர் உடையிலிருந்த பெண்மணி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தூக்கிச் சென்றார்.
வெகுநேரமாகியும் குழந்தையை கொண்டுவராத நிலையில் குழந்தை தேடியபோது தான் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.
அதன் பின்னர் மருத்துவமனையில் உள்ள சிசிடிவியை பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த பெண்மணி ஆட்டோவில் குழந்தையை ஏற்றுக் கொண்டு கடத்தி சென்றது தெரிய வந்தது.
அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN