Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 14 பிப்ரவரி (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 11 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இரவு தங்கினார்.
அமித்ஷாவுடன் மத்திய மந்திரிகள் எல். முருகன், மன்சுக் மாண்டவியா ஆகியோரும் வந்து இருந்தனர்.
இன்று (14.02.26) காலை 10.40 மணிக்கு மீண்டும் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள வரிச்சி குடிக்கு செல்கிறார்.
அங்கு பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் மாலை 4.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் திருச்சி வருகிறார்.
மாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லிக்கு செல்கிறார்.
மத்தியில் துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், புதுக்கோட்டை சாலை மற்றும் அவர் தங்கி உள்ள தனியார் விடுதி ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / Durai.J