கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
கோவை, 16 பிப்ரவரி (ஹி.ச.) கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இந்த பட்ஜெட் வெற்று பட்ஜெட் மக்களுக்கான எந்த பயனும் இல்லை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியதை தான் இந்த முறையும் மேயர் பேசியுள்ளார் என அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்
P


கோவை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது.

இந்த பட்ஜெட் வெற்று பட்ஜெட் மக்களுக்கான எந்த பயனும் இல்லை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியதை தான் இந்த முறையும் மேயர் பேசியுள்ளார் என அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்றம் சாட்டினார்.

கடந்த முறை மாநகராட்சி பட்ஜெட் தொடர்பான மேயர் உரைக்கும் இந்த பட்ஜெட் உரைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி படத்திற்கு பதில் துணை முதலமைச்சர் படம் இந்தானு பட்ஜெட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனவும் விமர்சனம் விமர்சனம் செய்துள்ளார்.

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை நிறைவேற்ற முடியாத அறிவிப்புகள் மட்டுமே உள்ளது

ஸ்மார்ட் கிளாஸ் கொடுப்பேன் என்று கடந்த ஆண்டு அறிவித்தார்கள் அதைத்தான் இம்முறை அறிவித்துள்ளார்கள் என்றும் பொது சுகாதாரத் துறையை பொறுத்த வரை பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவச பரிசோதனை செய்வேன் என்றார்கள். அதிலும் இந்த முறையும் அதையேதான் சொல்லி இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும்,பொறியியல் பிரிவில் கடந்தமுறை கிராஸ் கட் சாலையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என குறிப்பிட்டிருந்ததை தான் இந்த முறையும் செய்து இருக்கிறார்கள்.

ஆகாயத்தாமரை தூர் வாருவதற்கு எந்த ஒரு புது அறிவிப்புகளும் இல்லை.

சக்தி சாலை விரிவாக்கத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை கடந்த அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது அதற்கான அறிவிப்பு தற்போது வரை இல்லை.

மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா அமைக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவித்தார்கள் இந்த முறையும் அதே அறிவிப்பை கொடுத்துள்ளார்கள்.

தேர்தலுக்காக வெறும் மாயாஜால பட்ஜெட் அறிவித்திருக்கிறார்கள் இதனால் கோவை வாழ் மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

கிரிக்கெட் ஸ்டேடியம் வரும் என்று பொறுப்பு அமைச்சர் கூட நிறைய பேட்டிகள் கொடுத்திருந்தார்கள் ஆனால் எதுவும் தற்போது வரை வரவில்லை.

இளைஞர்களுக்கு கிரிக்கெட் ஸ்டேடியம் நீச்சல் குளமோ எதுவும் கட்டவில்லை.

ஐந்தாண்டு இருண்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது.

அதிமுக ஆட்சியில் அவினாசி சாலை மேம்பாலம், சத்தி சாலை மேம்பாலம், மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலம் உள்ளிட்டவற்றை கொடுத்தோம் ஆனால் இன்று மாநகராட்சி நிலை எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

கடந்த முறை வ உ சி பூங்காவில் தனியார் பங்களிப்புடன் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள் இந்த முறையும் அதையே அறிவித்துள்ளார்கள்.

இது வெறும் ஃபோட்டோ ஷூட் பட்ஜெட் தான் மக்களுக்கு எந்த பயனும் இல்லாத பட்ஜெட் என கூறி அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

Hindusthan Samachar / Durai.J