மகளிர்க்கு 5000 ரூபாய் வரவேற்கிறோம் மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள் - ஓபிஎஸ் பேட்டி
மதுரை, 16 பிப்ரவரி (ஹி.ச.) பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தை முடிந்து மாசி பிறந்து விட்டது அறிவிப்பு குறித்த கேள்விக்கு: பொ
O


மதுரை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தை முடிந்து மாசி பிறந்து விட்டது அறிவிப்பு குறித்த கேள்விக்கு:

பொறுமையாக இருங்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு:

அப்படியா.

பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு:

பட்ஜெட் வந்த பிறகு தான் தெரியும்.

மகளிர்க்கு 5000 கொடுத்தது குறித்த கேள்விக்கு:

நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார். சிறப்பு கோடைகால நிதியாக 2000 கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

ஐயாயிரம் மகவிற்கு கொடுத்ததை முன்னாள் முதல்வராக எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு:

வரவேற்கிறோம் மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்.

தை மாதத்தை விட மாட்டேன்கிறீர்கள் என்று கூறிவிட்டு சென்றார்.

Hindusthan Samachar / Durai.J