Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 16 பிப்ரவரி (ஹி.ச)
உலக புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை மே மாதம் தரிசனம் செய்வதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாக உள்ளன.
இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவா உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு, நாளை மறுநாள்
(18-ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இந்த சேவை டிக்கெட்டுகளை பெறுவதற்கான மின்னணு குலுக்கலுக்கு 20-ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் 20-ம் தேதி முதல் 22ம்தேதி மதியம் 12 மணிக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 21ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். மெய்நிகர் சேவைகளுக்கான டிக்கெட் ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்கான தரிசன நேரங்கள் 21ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அங்கபிரதட்சனம் செய்வதற்கான டோக்கன்கள் 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி சேவா, பரக்காமணி உண்டியல் காணிக்கை (ஏப்ரல்) எண்ணுவதற்கான சேவையில் பங்கேற்பதற்கான ஒதுக்கீடு 27ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்.
மேற்குறிப்பிட்ட அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://udevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b