Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 15வது நாளான இன்று காலி தட்டுகளையும் டிபன் பாக்ஸ்களை தட்டி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தொடர் போராட்டத்தை தொடர்ந்து இன்று அனைவருக்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் காலி தட்டுகளையும் டிபன் பாக்ஸ் ஆகியவற்றை தட்டி ஒலி எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். அரசு உடனடியாக தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / Durai.J